நரைமுடி

வயதானவுடன் தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால் பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு நரை தோன்ற ஆரம்பித்து விடும். இதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும் ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. இளம் வயதில் நரை ஏற்பட்டால் அதனைத் தவிர்த்து சரி பண்ண முடியும்.

குறைபாட்டை நீக்கும் முறைகள்:

1. சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களைத் தலைக்குப் பயன்படுத்தலாம்.

உணவு:

இரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவற்றைச் சரிவிகிதமாக சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு வந்தால் நரைமுடியை 10 சதவீதம் தவிர்க்க முடியும்.

பி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கூந்தலுக்கு எப்பொழுதும் எண்ணெய்ப்ப்பசையும் , நீர்ச்சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி நரைமுடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும்பொழுது முறையான பயிற்சி வேண்டும். சரியான முறையில் ஹென்னாவைச் சேர்த்துப் போட வேண்டும். ஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும்பொழுது ஒரு கோப்பை தண்ணீரில் ஷாம்பூவைக் கலந்து பின்பு பயன்படுத்த வேண்டும். அப்பொழுது ஒரே இடத்தில் ஷாம்பூ இல்லாமல் பரவலாக இருக்கும்.

நரைமுடி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

முல்லைப் பூவின் மருத்துவ குணம்

முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும்.

முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.

முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.

ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.

முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பூ மட்டுமல்லாமல், அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.

உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி


தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.

இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.